பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் உலக தாய்மொழி நாள் சொற்பொழிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் உலக தாய்மொழி நாள் சொற்பொழிவு.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக உலக தாய்மொழி நாள் முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு 'சிறந்தே பிறந்தவள்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி தமிழ்ச்சங்க செயலாளரும் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளருமான திரு செளந்திரபாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 

இவர் தனது உரையில் தமிழின் தொன்மையும் சிறப்பையும் எளிய வகையில் எடுத்துரைத்தார். மேலும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் சிலரின் வாழ்க்கை குறிப்பையும் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டையும் நகைச்சுவையுடன் நயமுடன் எடுத்துரைத்தார். தொடர்ந்து 'நானும் என் மொழியும்'  என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்க பாராட்டுகளையும் தெரிவித்தார்.  முன்னதாக முனைவர் கார்த்திகேயன், ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) அவர்கள் தலைமை உரையாற்றினார்.  


தொடர்ந்து இந்நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறை தலைவருமான பேராசிரியர் முனைவர் சி கோவிந்தராஜ் அவர்கள் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதற்கான வரலாற்று பின்புலத்தை எடுத்துரைத்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார்.  முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த  அனைவரையும் முதலாம் ஆண்டு முதுகலை ஆங்கில இலக்கிய மாணவி செல்வி செவ்வந்தி வரவேற்று பேசினார். 


இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி செல்வி ஷைனி நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வை செல்வி நேகா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹரி தாமரைச்செல்வன் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்கள் முகமது சமீர்,  பெருமாள்,  பழனிச்சாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad