மாரண்டஅள்ளி பேருராட்சி கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 பிப்ரவரி, 2024

மாரண்டஅள்ளி பேருராட்சி கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பேரூராட்சி கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேருராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் குமுதா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வரவு - செலவு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் 15 வார்டில், உயர் மின் கோபுரம் மற்றும் நவீன வசதியுடன், நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்ககுதல், பேரூராட்சிக்கு சொந்தமான புளியமரம் மகசூல் ஏலம் மற்றும் . கடைகள் வாடகைக்கு விடுவது தொடர்பாகவும், கோடை காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குதல், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் 1 கோடி 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திட்ட பணிகள் மேற்கொள்ள பணி ஆணை வழங்குதல், 3 வது வார்டு, கவுனுர் மற்றும் பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலை சுற்றி கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், ,பேரூராட்சி அலுவலர்கள் சம்பத், தங்கராஜ்,தூய்மை மேற்பார்வையாளர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad