பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழாவில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி குறித்து சார் ஆட்சியர் தலைமயில் பேச்சுவார்த்தை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 பிப்ரவரி, 2024

பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழாவில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி குறித்து சார் ஆட்சியர் தலைமயில் பேச்சுவார்த்தை.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, புதூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி குறித்து தாசில்தார் அலுவலகத்தில் சார் ஆட்சியர் காயத்திரி தலைமயில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைப்பெற்றது.


இக் கூட்டத்திற்க்கு பாலக்கோடு  போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து, தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு 12 ஊர் கிராமம் சார்பாக  மனு அளித்திருந்தனர்.


இதுகுறித்து நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை என்றும். மீறி நடத்தினால் சம்மந்தபட்ட நிர்வாகிகள், காளை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 


மேலும் கோயில் திருவிழா அமைதியாகவும், எவ்வித அசெளகரியமும் ஏற்படாதவாறு நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொன்டனர். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பாலக்கோடு, மேல் தெரு, காவாப்பட்டி, சித்திரப்பட்டி, பணங்காடு, வாழைத்தோட்டம், ரெட்டியூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், தர்மகர்த்தா மற்றும் கோயில் விழா குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad