அரூர் அருகே தனியார் பள்ளி வாகனத்தை மதுபோதையில் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் தட்டிகேட்ட நபர் மீது சராமாரி தாக்குதல்; வழக்கறிஞர் தலைமறைவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 பிப்ரவரி, 2024

அரூர் அருகே தனியார் பள்ளி வாகனத்தை மதுபோதையில் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் தட்டிகேட்ட நபர் மீது சராமாரி தாக்குதல்; வழக்கறிஞர் தலைமறைவு.


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொடமாண்டபட்டி பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் சென்ற தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டுனரிடம் மது போதையில்  பிரச்சனை செய்த நபர்களிடம் அவ்வழியாகச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன், எதற்கு ஓட்டுநரிடம் தகராறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார் அப்போது இளைஞர்கள்  நீ எதற்கு கேட்கிறாய் என கூறி   அவரை சராமாரியாக தாக்கியுள்ளார்கள். 

பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்து ஈச்சம்பாடியில் உள்ள கோழி கடையில் அமர்ந்து கொண்டிருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மூவேந்தனிடம்  மன்னிப்பு கேட்பதாக சொல்லி இரண்டு நபர்கள் வந்து அவரது  இரு கால்களையும் பிடித்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை செய்தனர்.


தாக்குதலை ஏற்படுத்திய சண்முகம் மகன்  வழக்கறிஞர் பிரசன்னகுமார், மகேந்திரன், மகன் அரவிந்த், மற்றும் இரண்டு நபர்கள் என நான்கு பேரும் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. தாக்குதலை ஏற்படுத்திய அரவிந்த், மற்றும் பிரசன்னகுமார், தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களுடன் இருந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். விசிக ஒன்றிய செயலாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad