மாதேஅள்ளி கிராமத்தில் உக்கிர நாக நாராயணி கோவில் கும்பாபிஷேக விழா! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

மாதேஅள்ளி கிராமத்தில் உக்கிர நாக நாராயணி கோவில் கும்பாபிஷேக விழா!


பென்னாகரம் வட்டம் மாதேஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரமாருதிராயன் கோவில் வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ உக்கிர நாக நாராயணீ கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது.


கடந்த வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நட்டு முளைப்பாரி இட்டு விழா துவங்கியது. நேற்று முன் தினம் புனித தீர்த்த குடங்கள் அழைத்தல், அக்கினி சங்கரனம், யாகசாலை அலங்காரம் நடைபெற்றது. நேற்று யாகசாலை கணபதி பூஜை, சூரிய, கோ பூஜை திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று மாலை எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நடைபெற்றது.


இன்று காலை திருப்பள்ளி எழுச்சி மங்கல இசையுடன் கோ பூஜை, கணபதி பூஜை பிம்பசுத்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு யாத்ராதான சங்கல்பம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ உக்ர நாக நாராயணீ கோபுரம், பரிவாரம் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் சர்வ அலங்காரம், அஷ்டோத்திர அர்ச்சனை, மாங்கல்யதாரணம், தீபாராதனை, எஜமானர் மரியாதை ஆகியவை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணிக்கு ஸ்ரீபுரம் சதாசிவம் அவர்களுடைய பக்தி இன்னிசை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.


கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை வீர மாருதிராயன் ஆலய அனுமன் உபாசகர் கடக்குட்டி கண்ணன் மற்றும் விழா குழுவினர் மற்றும் மாதேஅள்ளி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad