பூதநத்தம் கிராமத்தில் உழவர் திருவிழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

பூதநத்தம் கிராமத்தில் உழவர் திருவிழா நடைபெற்றது.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு பூதநத்தம் கிராமத்தில் உழவர் திருவிழா நடைபெற்றது, விழாவினை பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் திரு முனிகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.  அவர் பேசுகையில் வேளாண்மை துறை திட்டங்கள் குறிப்பாக மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகள், ஜிப்சம் ஜிங் சல்பேட், தார்பாலின் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படுவது குறித்தும், தமிழ்நாடு நீர் நிலவள திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் உளுந்து நிலக்கடலை செயல் விளக்க மானியம் குறித்தும், திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

மேலும் பயிற்சியில் தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலையத்தில் துணை வேளாண்மை இயக்குனர் திரு, குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு அட்மா திட்டம் குறித்தும், பிரதமரின் கவுரவ நிதி திட்டம் குறித்தும், விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்துவதின் அவசியம் குறித்தும் காட்டுப்பன்றி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும், விளக்கம் அளித்தார், மேலும் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக திரு வேலுசாமி அவர்கள் கலந்துகொண்டு வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுவது குறித்து உழவன் செயலை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் கருவிகள் முன்பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்.


மேலும் தோட்டக்கலைத் துறையை சார்பாக உதவி தோட்டக்கலை அலுவலர் திரு சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு தோட்டக்கலை துறையின் மானிய திட்டங்கள் குறிப்பாக தக்காளி ,நெல்லி பப்பாளி, மா, டிராகன் பழச்செடிகள், மானியத்தில் வழங்கப்படுவது குறித்தும், மேலும் 50 சதவிகித மானியத்தில் மாடி தோட்ட உபகரணங்கள் வழங்குவது குறித்தும், விளக்கம் அளித்தார். மேலும் இவ்விழாவில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் சார்பாக வேளாண்மை அலுவலர் திரு தமிழரசு அவர்கள் கலந்துகொண்டு மின்னணு வர்த்தகம் மற்றும் பண்ணை வழி வர்த்தகம் குறித்தும் ஒழுங்கு விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்தி தங்கள் விளைபொருளை அடமானம் வைத்து பொருளீட்டு கடன் பெறுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.


மேலும் பயிற்சியில் முன்னோடி இயற்கை விவசாயி திரு எஸ் பி பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார், மேலும் இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக உதவி கால்நடை மருத்துவர் திரு செல்வகுமார் அவர்கள் கலந்து கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் பராமரிப்பு முறைகள், தடுப்பூசிகள், மற்றும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார். 


மேலும் விழாவில் வனவர் திரு இளையராஜா அவர்கள் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் தேக்கு, மகாகனி, பூவரசன் ,மலைவம்பு போன்ற மரங்கள் மானியத்தில் வழங்குவது குறித்தும் அதற்கான ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்,  மேலும் பட்டு வளர்ச்சி துறை சார்பாக,  ஆய்வாளர் திரு கனகவேல் அவர்கள் கலந்துகொண்டு பட்டு புழு வளர்ப்பில் கோடைகாலங்களில் ஏற்படும் நோய்கள் குறித்தும் அதன் தடுப்பு முறைகள், நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் குறித்தும் குறித்தும் விளக்கம் அளித்தார்,


மேலும் பயிற்சியில் வட்டார தொழில்நுட்பு மேலாளர் திரு சரவணன், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் திரு சண்முகம், திருப்பதி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆத்மா திட்ட தலைவர் திரு சண்முகம், பூத நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திரு அருணாசலம், கவுன்சிலர் திரு தாமோதரன் அரூர் டிவிஎஸ் தொண்டு நிறுவன அலுவலர் திரு ரஹீம், உழவர் நண்பர் திரு முருகன், உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர், விழாவில் வேளாண்மை துறை மூலம்  கருத்து கண்காட்சிகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad