தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புவி அமைப்பியல் துறை சார்பாக ஒரு நாள் சிறப்பு சொற்பொழிவு நிலையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான பெட்ரோலஜி மற்றும் நிலக்கரி புவியியலில் முன்னேற்றங்கள் பற்றிய தேசிய அளவிலான மாநாடு என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் ராம் மோகன் பேராசிரியர் பணி நிறைவு புவிஅமைப்பியல் துறை சென்னை பல்கலைக்கழகம் சென்னை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் திலகவதி இரண்டாம் ஆண்டு மாணவி வரவேற்புரை வழங்கினார்.
முனைவர் சஞ்சய் காந்தி அவர்கள் உதவி பேராசிரியர் புவி அமைப்பியல் துறை மற்றும் ஒருங்கிணைப்பாளர் நன்றி உரை நிகழ்த்தினார் இந்நிகழ்வை அருண் பாரதி ,வித்யாசாகர் உதவி பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக