தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பச்சனாம்பட்டி கிராமத்தில் சுமார் 50-ம் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு 2000 -ம் ஆண்டில் திமுக அரசு மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
நரிக்குறவர் மக்கள் வாழ்ந்த இடத்தின் அருகே 25 மீட்டர் புறம்போக்கு நிலம் இருந்துள்ளதாகவும், அதன் அருகே முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன், என்பவர் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது 25 மீட்டர் புறம்போக்கு நிலத்தை சேர்த்து திருமுருகன் சரஸ்வதி, என்பவருக்கு விற்று விட்டதாக சொல்லப்படுகிறது.
பின்பு 2013-ம் ஆண்டு 25 மீட்டர் புறம்போக்கு நிலத்தோடு 5 மீட்டர் நிலத்தை சேர்த்து சுமார் 30 மீட்டர் நிலத்தை திருமுருகன் சரஸ்வதி, பத்திரப்பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 2000-ம் ஆண்டில் நரிக்குறவர் மக்களுக்காக திமுக அரசால் கொடுக்கப்பட்ட நிலத்தில் இந்த ஐந்து மீட்டர் நிலம் உள்ளது என்று திருமுருகன் சரஸ்வதி, அழுத்தம் கொடுத்து வந்ததால் நில அளவையாளரை கொண்டு நிலத்தை அளவீடு செய்யப்பட்டது.
அதையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு சேர வேண்டிய ஐந்து மீட்டர் நிலம் நரிக்குறவர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் உள்ளதாக திருமுருகன் சரஸ்வதி கூறி வருவதால், நரிக்குறவர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து பார்க்கும் போது பேருந்துகள் செல்லும் தார்சாலை வரையில் வருகின்றது.
எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர், அரூர் வருவாய் கோட்டாட்சியர், அரூர் காவல்துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த நிலத்தை முறையாக அளவீடு செய்து எங்களுக்கு கொடுக்க வேண்டி இன்று அரசுப் பேருந்தை வழிமறித்து நரிக்குறவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறை, மற்றும் காவல் துறையினர் நரிக்குறவர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முறையாக அளவீடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக