இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ம. பழனிசாமி கோவை ஆர். வி. எஸ் கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கில துறை உதவி பேராசிரியர் உரையாற்றும்போது, பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட்டது. இன்றோ அது அன்றாட வாழ்க்கையோடு இணக்கமான ஒன்றாக மாறிப்போய்விட்டது. கல்வி, ஊடகம், போக்குவரத்து, வங்கித் துறை என பல்வேறு திசைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வீச்சு விரிவடைந்து வருகிறது.
மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு முன்னேற முயற்சி செய்யவேண்டும். வாய்ப்புகள் வரும்போது தயக்கத்தால், அச்சத்தால் பின்வாங்குதல் கூடாது என்றார் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், லிங்கிடின், டிவிட்டர் போன்றவைகளில் விளம்பர யுத்திகளை புகுத்தும் படிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன மற்றும் டிஜிட்டல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்தும் அதனை பெற தேவையான திறன்களை எப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், இருபால் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கு பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக