வாயில்லா ஜீவனை நல்லடக்கம் செய்த மருதம் நெல்லி ஜெயம் கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்.
தருமபுரி மாவட்டம் நல்லானூரில் இயங்கி வரும் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் பல மனிதநேயமிக்க செயல்களை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நல்லானூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை விபத்தில் அடிப்பட்டு நாய் ஒன்று இறந்துள்ளது, பலரும் இதை கவனிக்காத சுழலில் இன்று நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் எடுத்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
இதை கண்ட சாலையில் சென்ற பொது மக்கள் பலரும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை பாராட்டி சென்றனர். மனிதநேயமிக்க மானுட செயலில் மருதம் நெல்லி கல்வி குழுமம் எப்போதும் துணை நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக