தருமபுரியில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 பிப்ரவரி, 2024

தருமபுரியில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு நடைபெற்றது.


தருமபுரியில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு நடைபெற்றது, விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விழாவில் பேசும் போது, எனக்கு ஆண் பிள்ளளைகள் மட்டுமே பெண் பிள்ளை இல்லையே என்ற ஏக்கம் எனக்கிருந்தது, தமிழ்நாட்டில் உள்ள பெண் குழந்தைகள் அத்தனை பேரும் தன் குழந்தகைளாகவே பார்க்கிறேன், அது தனக்கு பெரும் மன நிறைவு தருகிறது என்றார்.


தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி்னாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் வெற்றிகரமாக செயல்படுத்தமுடியாது என பேசிய அமைச்சர் பள்ளிக்கூடங்களுக்கு ஏராளமான கொடையாளர்கள் நிலங்களாகவும், பொருட்களாகவும் வாரி வாரி வழங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளியை விட்டு வந்த பின்னர் என்ன செய்கிறார் என நெருங்கி பழக வேண்டும், எதோ ஒரு மன அழுத்ததில் குழந்தகைள் இருக்கலாம், அதிலிருந்து வெளியே கொண்டு வர குழந்தைகளோடு பெற்றோர்கள் நெருங்கி பழக வேண்டும், அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும், பள்ளிக்கல்வித்துறை தான் அறிவு சார்ந்த சமூதாயத்தை உருவாக்க முடியும், குழந்தகைளிடம் புத்தகத்தை கொடுத்து வாசிக்க ஆசிரியர்கள் வாய்ப்பு தரவேண்டும், மாணாக்கர்களுக்குள் இருக்கும் கூச்ச சுபாவம், தயக்கத்தை போக்க வாசிப்பு தன்மை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் அனைவருக்கும் ஐஐடி என்ற வாய்ப்பை அரசு உருவாக்கியிருக்கிறது.


ஒரு லட்ச அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பயில தேவையான வாய்ப்புகளை உருவாக்கி  தந்திருக்கிறது, நமக்கெல்லாம் படிப்பு வராது என மாணாக்கர்களை பெற்றோர்கள் குறுகிய மனப்பான்மையில் முடக்கி விடக்கூடாது, மற்றவர்களை பார்த்து குறை சொல்வதை விட்டு விட்டு நாம் என்ன செய்தோம் என அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இல்லம் தேடி கல்வி என்று மாணாக்கர்களுக்கு புத்தாக்க பயிற்சியினை கொண்டு வந்தது, அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளமே என்றார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad