கும்பாரஅள்ளி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்ளிட்டு இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

கும்பாரஅள்ளி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்ளிட்டு இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தருமபுரி மேற்கு மாவட்டம், காரிமங்கலம் ஒன்றிய திமுக சார்பில்  பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கும்பாரஅள்ளி கிராமத்தில், இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி தருமபுரி மேற்கு  மாவட்ட துணை செயலாளர் வக்கில் ஆ.மணி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் அதியமான், ஒன்றிய செயலாளர் இல.கிருஷ்ணன், வக்கில் கோபால், ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் கும்பார அள்ளி  கிராமத்தில்  உள்ள வீடுகளுக்கு சென்று தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் 1 கோடி 15 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்தும், 17 இலட்சம் குழந்தைகள் பயன் பெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்தும், விடியல் பயண பேருந்து திட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து திட்டம் குறித்தும்,‌ 1 கோடி 65 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சார இணைப்பு வழங்கியது குறித்தும், மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட தமிழக திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.


இந்நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் தங்கதுரை, முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கெளரி திருக்குமரன், உமாகுப்புராஜ், கவுன்சிலர் ஆண்டிமுருகன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad