இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கும் பொழுது விவசாயிகள் மர பயிர்கள் குறிப்பாக மலை வேம்பு புங்கன் மற்றும் வேம்பு புளி நாவல் மகாகனி ஆகிய மர பயிர்களின் சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வனவர் திரு வேடியப்பன் அவர்கள் கலந்து கொண்டு மர பயிர்கள் விற்பனை நிலவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிநேகம் தொண்டு நிறுவனம் நிறுவனர் திருமதி கமலா மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் பற்றியும் மர சாகுபடி செய்த விவசாயிகள் அனுபவங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில் குமார் அவர்கள் கலந்து கொண்டு அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு மனோஜ் குமார் அவர்கள் கலந்து கொண்டு உழவன் செயலி பதிவிறக்கம் மற்றும் உழவன் செயலியின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் அரூர் வட்டார உழவர் ஆலோசனை குழு தலைவர் திரு மதி அவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக