தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் மா. பழனி அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை வைத்தார்.
வட்டார சுகாதார ஆய்வாளர் திரு. ஆயிரம், ரவிந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் டெங்கு விழிப்புணர்வு தன் சுத்தம் சுற்றுப்புற தூய்மை உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த கலந்துரையாடல் மாணவர்களிடையே நடைபெற்றது. வருமுன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் நோய் வரும் முன் சுகாதார முறைகளை கடைபிடித்து நலமாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, ரேக்கா, அம்பிகா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக