ஆம் ஆத்மி கட்சி சார்பாக பொம்மிடியில் முப்பெரும் துவக்க விழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

ஆம் ஆத்மி கட்சி சார்பாக பொம்மிடியில் முப்பெரும் துவக்க விழா நடைபெற்றது.


பொம்மிடி -  முத்தம்பட்டி புதிய அகல ரயில் பாதை வேண்டும் என்ற கோரிக்கை தொடங்கி வைக்கப்பட்டது பொம்மிடி முத்தம்பட்டி இடையே 11 கிலோமீட்டர் உள்ள தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைத்தால் தர்மபுரி சென்னை வழித்தடத்தில் ரயில்கள் எளிதாக இயக்க முடியும் மேட்டூர் செல்லும் சரக்கு ரயில்கள் பொம்மிடி முத்தம்பட்டி வழித்தடத்தில் செல்ல ஏதுவாக அமையும் எனவே பொம்மிடி முத்தம்பட்டி புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டது இந்த கோரிக்கையை ஜாலியூர் ஊர் கவுண்டர் திரு ராஜாமணி அவர்கள் துவங்கி வைத்தார்கள்.


பொம்மிடி புதிய வட்டம் வேண்டும் என்ற கோரிக்கை தொடங்கி வைக்கப்பட்டது சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சியை தர்மபுரி மாவட்டத்தோடு இணைத்து தற்போது தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வட்டத்தில் உள்ள திப்பிரெட்டி அள்ளி கொண்டகரஅள்ளி முத்தம்பட்டி கோடுஅள்ளி போன்ற ஊராட்சிகளை இணைத்து பொம்மிடியை தலைமை இடமாகக் கொண்ட புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது இதனை முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.


பொம்மிடி பெயர் பிரச்சனை பொ.மல்லாபுரம் பேரூராட்சியை பொம்மிடி பேரூராட்சி என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை வலுப்படுத்தல் துவக்கி வைக்கப்பட்டது, பொதுமக்கள் அனைவரும் பொ.மல்லாபுரம் பகுதியை பொம்மிடி என தான் அழைக்கின்றனர். தமிழக அரசின் பெரும்பாலான துறைகள் இப்பகுதியை பொம்மிடி என தான் அழைக்கின்றது ஆனால் வருவாய்துறை மட்டும் என அழைக்கின்றது.


பொ.மல்லாபுரம் பேரூராட்சியை பொம்மிடி பேரூராட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், பொம்மிடி ஊராட்சியை பொ துரிஞ்சிபட்டி என பெயர் மாற்ற வேண்டும் என கோரிக்கை துவக்கி வைக்கப்பட்டது இதனை செயில் தொண்டு நிறுவன நிறுவனர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.


தலைவர் சி.சின்ன அரசு தலமை தாங்கினார், மாவட்ட இணைச்செயலாளர் P.ஜெபசிங் முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினர்களாக மாநில துணை செயலாளர் (OBC) திரு.K.ஈஸ்வரன் மற்றும்  மாவட்ட நிர்வாகிகள் A அசோகன், V.P.அன்புமணி, G வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்ட மன்ற தலைவர் A திருமால் மற்றும் V.தண்டபானி, R.தனராசு, G.கார்த்திகேயன், K.விஜயகுமார், K.நிரஞ்சன்குமார், S அசோக் குமார், C தனசேகரன், M பவித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad