பாலக்கோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

பாலக்கோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழா.


தருமபுரி மாவட்டம், பாலக்கேடு, தக்காளி மார்க்கெட், முன்பு பைபாஸ். சாலையில் தமிழக வெற்றி கழக சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் விஜய்காந்த், ஒன்றிய பொருளார் சிவகுமார். நகர தலைவர் சிலம்பு , நகர பொருளாளர்  முனியப்பன், ஒன்றிய துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு, தமிழக வெற்றி கழக சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விவசாய அணி தலைவர் சரவணன், வர்த்தக அணி நிர்வாகி கராத்தே மணி, நகர இளைஞர் அணி வேணு, கோவிந்தசாமி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad