சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.


பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. சர்.சி.வி. இராமன் பிறந்த தினமான பிப்ரவரி 28 ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

அறிவியல் தினத்தில் மாணவர்கள் அறிவியல் கண்ணோட்டத்துடன் அறிவியல் சிந்தனையையும், அறிவியல் பார்வையையும் உருவாக்கும் நோக்கத்துடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் செயல்முறை விளக்கங்கள் மாணவர்கள் மூலம் செய்து காட்டப்பட்டது. அறிவியல் எளிய மக்களுக்கானது என்பதை புரிந்து கொள்ளும் விதமாக மாணவர்கள் அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கிய சோதனைகளை செய்து காட்டினார்.


இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மா. கல்பனா செய்திருந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்கள் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களை வெகுவாக பாராட்டினார். அறிவியல் செய்முறை விளக்கங்கள் மனதில் நீங்காத வகையில் கருத்துக்கள் ஆழமாக பதிந்திருக்கும் என்பதையும் எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் அறிவியல் பார்வையுடன் அனைத்தையும் அணுக வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பழனிச்செல்வி, ராஜேஸ்வரி, ரேக்கா உட்பட மாணவர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad