பாலக்கோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை ,அபராதம் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 பிப்ரவரி, 2024

பாலக்கோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை இயங்க தடை ,அபராதம் .


தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில்,  உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை இணைந்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாலக்கோட்டில் கோட்டை தெருவில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் பாலக்காடு காவல் நிலைய காவல் ஆய்வாளர்  திரு.பாலசுந்தரம் அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் பாலக்கோடு காவல் நிலைய  தலைமை காவலர் ஆனந்த் பாபு இணைந்து பாலக்கோட்டில்  கோட்டைத்தெரு பகுதியில் ஆய்வு செய்தபோது ஒரு மளிகை கடையில் உட்புறத்தில்  மற்றும் கடையிலும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் ஐந்து கிலோ அளவிலானது கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூபாய்.5000 இருக்கும்.


மேல் நடவடிக்கைக்காக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா எம்.பி.,பி.எஸ்., அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மேற்படி கடை இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கியதுடன்,  கடையை மூடிடவும் உத்தரவிட்டார்.  அதனடிப்படையில் மேற்படி கடையை  உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் தலைமை காவலர் ஆனந்தபாபு, முதல்நிலை காவலர் வேலு இணைந்து நோட்டீசை நேரில் வழங்கி கடையை மூடி மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடையின் கதவில் ஒட்டி உடனடி அபராதம் ரூபாய் 25000 விதிக்கப்படும் என தெரிவித்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad