தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அகற்றப்படாமல் உள்ள கட்டுமான பொருட்களால் பொதுமக்கள் அவதி, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு அரசு பேருந்து தனியார் பேருந்து என 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் பாலக்கோடு பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் பெங்களூர் மைசூர் சென்னை பழனி கோவை தர்மபுரி சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நகர மக்கள் புறநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எப்போதும் பரபரப்பாக காணப்படும், பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
பேருந்து நிலைய பராமரிப்பு பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் அப்புறப்படுத்தாதல், வாகன ஓட்டிகள் கடும் அமைதி அடைந்து வருகின்றனர். தற்போது இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க்கும் ஸ்ரீ புதுர் மாரியம்மன் திருவிழா நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கட்டுமான பொருட்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக