வாகன ஓட்டிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 பிப்ரவரி, 2024

வாகன ஓட்டிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் சுங்கச்சாவடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் சுங்கச்சாவடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை இன்று (03.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள். ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 -ம் தேதி வரை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பேரணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தருமபுரி மாவட்ட பொது சுகாதாரத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து வாகன ஓட்டிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இவ்வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் உடல் ஆரோக்கித்தின் அவசியத்தினை உணர்த்தும் வகையிலும் இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இம்மருத்துவ முகாமில் ஈ.சி.ஜி, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகன ஓட்டிகளும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


முன்னதாக வாகன ஓட்டிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் அச்சிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை வெளியிட்டார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பால் பரின்ஸிலி ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தாமோதரன், சேலம் திட்ட செயலாக்க அலகு துணை மேலாளர் திரு.திலீப் வர்மா, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தொழில்நுட்ப மேலாளர் திரு.ரவி, கிருஷ்ணகிரி தொப்பூர் சுங்கச்சாவடி திட்டத்தின் திட்டத்தலைவர் திரு.எஸ்.நரேஷ், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.பார்வதி, மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.தரணிதரன், சுங்கச்சாவடி இயக்க மேலாளர் திரு.அருண்குமார், சுங்கச்சாவடி சாலை பாதுகாப்பு மேலாளர் திரு.ஞானசேகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  

கருத்துகள் இல்லை:

Post Top Ad