முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சிஅயர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சிஅயர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலரை நேரில் அணுகி இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது புர்த்தியடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்து இரண்டாவது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.


இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியுதவி விவரம் ஒரு பெண் குழந்தையுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ. 50,000 க்கான டெபாசிட்பத்திரம் வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ஒரு குழந்தைக்கு ரூ.25,000 வீதம் 2 குழந்தைக்கு ரூ.50,000 க்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். முதல் குழந்தை பெண் குழந்தை இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தாலும் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம் 3 குழந்தைகளுக்கும் ரூ.75,000/ க்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான முதிர்வுத்தொகை இக்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் பொழுது பெற்றுக்கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது தாயாரின் மாற்றுச்சான்று, தந்தையின் மாற்றுச்சான்று, திருமண பத்திரிக்கை, முதல் குழந்தை பிறப்பு சான்று, 2 ஆம் குழந்தை பிறப்பு சான்று, வருமான சான்று ரூ.72000 க்குள் இருக்க வேண்டும் (தாசில்தாரிடம்), இருப்பிடச்சான்று (தாசில்தாரிடம்), ஜாதிச்சான்று (தாசில்தாரிடம்), ஆண் வாரிசு இல்லாத சான்று (தாசில்தாரிடம்), தாயார் (அ) தந்தையின் கருத்தடை செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்), மருத்துவரிடம்பெற்றிருக்கவேண்டும். 


ரோட்டரி வழக்கறிஞரிடம் 2 பெண் குழந்தைக்குப் பின் ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். குடும்பபுகைப்படம், குடும்பஅட்டை உள்ளிட்ட சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும். (பொது பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.) மேலும் விபரங்கள் பெற தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் அலுவலக தொலைபேசி எண். 04342-233088 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்., என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad