தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, சுற்று வட்டார பகுதிகளான,பஞ்சப்பள்ளி, பெரியானூர், அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், 4500 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள், நெல், கரும்பு, வாழை, தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு எதிர்பார்த்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனாதால், கோடை காலம் துவங்கும் முன்னரே ஏரி, குளம், கிணறு, ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து வருவதுடன் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பயிர்களுக்கு போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
50 அடி கொள்ளவு கொண்ட பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் தற்போது 39 அடி தண்ணீர் உள்ளது.சின்னாறு அணையிலிருந்து பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் செங்கன்பசுவந்தலாவ்ஏரி, ஜெர்தலாவ் ஏரி, தாமரை ஏரி உள்ளிட்ட ஏரிகளின் மூலம் 4500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் எனவும், எனவே தமிழக அரசு உடனடியாக சின்னாறு அணையிலிருந்து பாசனத்திற்க்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக