இந்த பேரணியானது பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே இருந்து தாசம்பட்டி பிரிவு சாலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கடைவீதி வட்டாட்சியர் அலுவலகம் போடூர் நான்குரோடு ஏரியூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதி வரை சென்றடைந்தது.
இப்பேரணியில் தலைக்கவசம் அணிய வேண்டும் இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது, வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்பன 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பென்னாகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜன் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாப்பாரப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன பென்னாகரம் காவல் நிலைய உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவலர்கள் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்கும் ஊழியர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக