மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.


தருமபுரி மாவட்டம், குண்டலப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தருமபுரி மாவட்டம், குண்டலப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நிதியுதவியுடன் லிட்டில் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் 18 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய ஆண்களுக்கான இல்லத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (20.02.2024) நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.


தொழிற் பயிற்றுநர்கள் நவீன காலத்திற்கு ஏற்றவாறு, தொழிற்பயிற்சிகளை பயின்று இல்லவாசிகளுக்கு கற்பிக்குமாறும் மேலும் இல்லத்தின் சுற்று புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும், இல்லத்தில் தங்கியுள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை நல்ல முறையில் பராமரிக்குமாறு தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.


மேலும், இல்லத்தில் 52 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் தங்கி இருந்தனர், இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடினார்கள். இந்த இல்லத்தில் அனைத்து பணியார்களும் வருகை புரிந்து இருந்தனர். மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆண்களுக்களுக்கு ஒயர் கூடை பின்னுதல் மற்றும் மிதியடி செய்தல் ஆகிய தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த ஆய்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு. ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad