பென்னாகரம் அருகே தண்ணீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பென்னாகரம் அருகே தண்ணீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்.


ஓட்டு கேட்டு மட்டும் வரீங்க நாங்க தண்ணி குடிச்சு, உசுரோட இருந்தா தானே ஓட்டு போட முடியும், சோத்துக்கு பஞ்சம் இல்லை, தன்னி பஞ்சம், தலை விரித்து ஆடுகிறது. ஏதாவது பண்ணுங்க சாமி கிராமப் பெண்கள் கதறல். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கெண்டையன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, போடம்பட்டி தெக்காடு கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பான்மையானவர்கள் வேலை தேடி வெளியூர் சென்று விடுகின்றனர். முதியவர்களும் பெண்களும் மட்டுமே ஊரில் உள்ளனர். 

இந்நிலையில் இந்த பகுதிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மேல்நிலை தேக்க தொட்டி செயல்படாமல், புதர் மண்டி, பாழடைந்து கிடைக்கிறது. குடிநீருக்கு கூட தண்ணீர் இன்றி கிராம மக்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை தொடர்கிறது. ஊராட்சி நிர்வாகத்திடமும் அரசு அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என இப்பகுதி பொதுமக்கள் புலம்பல். இதனால் குடிநீர் வசதி செய்து தர கிராம மக்கள் வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad