இளநிலை வருவாய் ஆய்வாளர்/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.
இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம், செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வாட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.23 முதல் கலைக்கட்ப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுயற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈர்ப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக