பாலக்கோடு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் லாரி உரிமையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்-போலீசார் சமரசம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் லாரி உரிமையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்-போலீசார் சமரசம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள திம்மம்பட்டி பகுதியில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கரும்பு அரவைக்கு தேவையான கரும்புகளை லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், லாரிகளில் கரும்பு பாரங்களை ஏற்றி வருகின்றனர். விவசாயிகள் தங்களுடைய சொந்த டிராக்டரில் கரும்புகளை ஏற்றி வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் விதிமுறைகளை மீறி லாரியில் ஏற்றி வந்த  கரும்பினை முதலில் அரவைக்கு அனுமதிப்பதாகவும், ட்ராக்டரில் ஏற்றிவரப்பட்ட விவசாயிகளின் கரும்பிற்கு ஒரு வாரத்திற்கும் மேலாக காலம் கடத்தி அரவைக்கு அனுமதிப்பதாகவும் இதனால் கரும்பின் எடை குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும், லாரி உரிமையாளர்கள் தங்களது சுயலாபத்திற்காக டிராக்டர்களில் ஏற்றி வரும் கரும்புகளை இறக்க விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்நிலையில் விவசாயிகள் டிராக்டரில் ஏற்றி வந்த கரும்புகளை இறக்க விடாமல் லாரி உரிமையாளர்கள் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலகோடு காவல்துறையினர் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகள் இருதரப்பினரையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad