15கோடி செலவில் பொம்மிடி ரயில் நிலையம் புதுப்பிப்பு, காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

15கோடி செலவில் பொம்மிடி ரயில் நிலையம் புதுப்பிப்பு, காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் பெருமளவு ரயில் பயணிகள் பயன்பாட்டில் உள்ளதால், ரயில் நிலையத்தை 15 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த நிகழ்ச்சியை இந்திய பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, இந்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான ரயில் பயணிகள் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் ரயில் வசதி உள்ளதால் தினமும் பல்லாயிரம் ரயில் பயணிகள் வந்து செல்கின்றனர். நாட்டை இணைக்கும் முக்கிய ரயில் பாதை பொம்மிடி வழியாக செல்வதால் பயணிகள் வசதிக்காக கூடுதல் வசதிகள் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்தியாவிலுள்ள 554 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது, அந்தப் பட்டியலில் பொம்மிடி ரயில் நிலையமும் இணைக்கப்பட்டு ரூபாய் 15கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad