தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஜக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சேது (25) மற்றும் ஜெயசூரிய (23) ஆகிய இரண்டு இளைஞர்கள் எரியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் பென்னாகரம் சென்று கொண்டிருந்தனர அப்பொழுது குள்ளாத்திரம்பட்டி என்னும் இடத்தில் எதிரில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்பொழுது எரியூரிலிருந்து நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு பென்னாகரம் திரும்பிய தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி இரண்டு இளைஞர்களையும் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக