பாலக்கோட்டில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணம் யின்றி எடுத்து வந்த 1 லட்சத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 மார்ச், 2024

பாலக்கோட்டில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணம் யின்றி எடுத்து வந்த 1 லட்சத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை ரயில்வே கேட்  அருகே பறக்கும படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது தர்மபுரியிலிருந்து  இருந்து பாலக்கோடு நோக்கி  வந்த  4 சக்கர சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில்  காரிமங்கலம் அடுத்த கிரியானஅள்ளி  கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் (வயது. 45) என்பவர்  உரிய ஆவணங்கள் இன்றி 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம்  எடுத்து வந்ததுதெரிய வந்தது. அதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.


பாலக்கோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டாட்சியர், ஆறுமுகம் , துணை வட்டாட்சியர் எழில் மொழி ஆகியோர் முன்னிலையில்  பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் பிரகாஷிடம்  பணத்திற்க்கான உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று கொள்ள அறிவுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad