நிகழ்ச்சிக்கு பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தாசில்தார் ஆறுமுகம், பி.டி.ஓ.சுருளி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.bவரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து உதவி தேர்தல் அலுவலர் தனப்பிரியா துவக்கி வைத்தார்.
இந்த ஊர்வலமானது கடைவீதி, பஸ் நிலையம், ஸ்தூபி மைதானம், காவல்நிலையம் வழியாக பேரூராட்சியை அடைந்தது, ஊர்வலத்தின் போது வாக்களிப்பது ஜனநாயக கடமை, நல்லாட்சி அமைய வாக்களிப்போம், வாக்களிப்ப்பது நமது அடிப்படை உரிரிமை, ஜனநாயகத்தை காக்க வாக்களிப்போம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் மகளிர் திட்ட மாவட்ட பயிற்றுநர் பெருமாள், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், நாராயணமூர்த்தி, வி.ஏ.ஓ.சின்னசாமி மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக