தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் ஊராட்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் அரசு கல்லூரியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் தண்ணீரியின்றி வரண்டு உள்ளது.
இந்த நிலையில் கல்லூரியில் 1200மாணவிகளுக்கு கழிவறைக்கு கூட தண்ணீர் இன்றி மாணவிகள் தவித்து வந்த வருகின்றனர். இதையடுத்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் தனது சொந்த செலவில் மாதம் 1 இலட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை லாரிகள் மூலம் விநியோகம் செய்து வருகிறார்.
தனது சொந்த செலவில் கல்லூரிக்கு தண்ணீர் வினியோகம் செய்து வரும், முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கல்லூரி முதல்வர் பங்காரு, மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர். அது சமயம் கூட்டுறவங்கி தலைவர் வீரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக