தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த எலங்காளப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் பாலக்கோட்டில் உள்ள பள்ளயில் 10ம் வகுப்பு படித்து வந்தார், மாணவியின் விருப்பத்தை மீறி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 1 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் பெற்றோருக்கு தெரியாமல் பார்க்கோடு அருகே உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கடந்த மார்ச்.13 ம் தேதி பாலக்கோடு மகளிர் போலீசில் வாலிபர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வந்த நிலையில், வாலிபரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக