எம்.செட்டி அள்ளியில் 18வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கட்டடிட மேஸ்திரி தலைமறைவு வலைவீசி தேடி வரும் காவல் துறை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மார்ச், 2024

எம்.செட்டி அள்ளியில் 18வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கட்டடிட மேஸ்திரி தலைமறைவு வலைவீசி தேடி வரும் காவல் துறை.


கோவை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி, இவரது பெற்றோர் சண்டை போட்டு பிரிந்து விட்டதால், கடந்த ஒரு வருடத்திற்க்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டி அள்ளியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில் பாட்டி வீட்டிற்க்கு அருகில் உள்ள  கட்டிட மேஸ்திரி நடராஜ் (வயது. 26) என்பவர் சிறுமியிடம் நைசாக பேசி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி மாணவி திடிர் என வாந்தி எடுத்து மயக்கமடைந்தார், உடனடியாக மாணவியை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.


அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் 8 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாணவியன் பாட்டி பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கட்டிட மேஸ்திரியை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad