18 கோடியில் சீரமைக்கப்பட்டு ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை திறந்துவைத்து மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மார்ச், 2024

18 கோடியில் சீரமைக்கப்பட்டு ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை திறந்துவைத்து மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ”ரெயின்போ வேர்ல்ட்” பொழுதுபோக்கு பூங்கா மற்றும் புனரமைக்கப்பட்ட வண்ணமீன் காட்சியகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ”ரெயின்போ வேர்ல்ட்” பொழுதுபோக்கு பூங்கா மற்றும் புனரமைக்கப்பட்ட வண்ணமீன் காட்சியகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று (01.03.2024) திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கை செய்யப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலாத்துறை சார்பில் ரூ.18.00 கோடி மதிப்பீட்டில், 3.10 ஏக்கர் நிலப்பரப்பில் நுழைவு வாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணை குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளைக்கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், காட்சி கோபுரம் போன்ற 25-க்கும் மேலான பல்வேறு பணிகள் மேற்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆலோசனையின் படி, மாவட்ட நிர்வாகம் சார்பாக மேலும் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்தும் பொருட்டு, தனியார் பங்களிப்புடன் 69 சென்ட் நிலப்பரப்பில் பறவைகள் பூங்கா, 7D திரையரங்கம், பலூன் நீர் விளையாட்டு, புல் ரைடு போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய "ரெயின்போ வேர்ல்ட்" பொழுதுபோக்கு பூங்கா ஒகேனக்கலில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுதுபோக்கு பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., இன்றைய தினம் திறந்து வைத்தார்கள்.

மேலும், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 2006-07 –ம் ஆண்டு பகுதி – II திட்டம் மற்றும் ஒகேனக்கல் மேம்பாட்டு நிதியில் வண்ணமீன் காட்சியகம் 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்பொழுது ஒகேனக்கல் வண்ணமீன் காட்சியகமானது ஒகேனக்கல் மேம்பாட்டு நிதி மற்றும் தருமபுரி மாவட்ட மேம்பாட்டு மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் நிதி ரூ.23.32 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வண்ணமீன் காட்சியகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.


தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மூலம் பழுதான கண்ணாடி தொட்டிகள் மற்றும் உபகரணங்கள் புதியதாக மாற்றப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. 40 கண்ணாடி தொட்டிகளிலும் தங்கமீன், அரவானா, கௌராமி, பிளவர் ஹார்ன், லோச், மோலி, கப்பி, பிளாட்டி, ஆஸ்கர், பார்ப், டெட்ரா, ஏஞ்சல் மீன், டிஸ்கஸ், பிளவர் ஹார்ன், புலி சுறா, கோய், கிளி மீன், சிசிலிட், ஸீப்ரா மீன் போன்ற பல்வேறு வகையான வண்ணமீன்கள் புதியதாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு. என். செல்வராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி. கவிதா ராமகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு. மா. கெம்புராஜ், தருமபுரி மண்டல துணை இயக்குநர் (மீன்வளம்) திரு.சி.சுப்ரமணியன், உதவி இயக்குநர் (மீன்வளம்) திரு.கோகுலரமணன், சுற்றுலா அலுவலர் திரு.து.உமா சங்கர், வட்டாட்சியர் திரு.சுகுமார், உதவி சுற்றுலா அலுவலர் திரு.கதிரேசன், கூத்தப்பாடி ஊராட்சிமன்ற தலைவர் திரு.கே.பாஸ்கர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad