மாண்டஅள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மார்ச், 2024

மாண்டஅள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

 
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பேருராட்சி செயல் அலுவலர் குமுதா முன்னிலை வகித்தார்.


இதில் கவுனூர் 3வது வார்டில் 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைத்தல், 13வது வார்டு ஆஞ்சநேயர் கோயில் தெருவில் 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் மற்றும் சிறு பாலம் அமைத்தல், தாண்டவ உடையார் தெருவில் 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைத்தல், 8வது வார்டில் 2 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்தல், 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சின்னாறு அணை பகுதியில் உள்ள  ஆழ்துளை கிணறு மூலம் மாரண்டஅள்ளி பேரூராட்சி  பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தல், 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆர்.ஆர் பூங்காவிற்க்கு சுற்று சுவர் அமைத்தல், ஆகிய பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், பேரூராட்சி கவுண்சிலர் யதிந்தர், வார்டு கவுன்சிலர் சண்முகம், ஒப்பந்தாரர் ராஜேந்திரன், கவுனூர் நாராயணன், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad