பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 மார்ச், 2024

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் இலட்சுமணன், சக ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன் ஆகியோரின் தீவிர முயற்சியில், பாலக்கோடு அண்னா தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அக்ரஹார ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தேர்மூட்டியில் உள்ள நூற்றாண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காவாப்பட்டியில் உள்ள   ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கடமடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எர்ரனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சொட்டாண்டஅள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 7 பள்ளிகளிலிருந்து, ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி  பிரிவில் 60 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய தலைமை ஆசிரியர் லட்சுமணன் அவர்கள் அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கல்வி விளையாட்டு போன்றவை சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து பயனடைய கேட்டுக் கொண்டதுடன், புதியதாக சேர்க்ப்பட்ட மாணவர்களுக்கு பேனா வழங்கி வரவேற்றார். மேலும் பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் வாழ்த்துக்களை  தெரிவித்தார்.


அது சமயம் தலைமை ஆசிரியர்கள் பால சண்முகம், சாந்தி, சித்ரா, அருள்நாதன், வெங்கடேசன், மலர்விழி மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad