பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று துவக்கி வைத்தார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (25.03.2024) துவக்கி வைத்தார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024, தொடர்பான தேர்தல் அறிவிப்பு அட்டவணையானது 16.03.2024 பிற்பகல் வெளியிடப்பட்டது. இந்நேர்வில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 நடைபெறுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.காயத்ரி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பொறுப்பு அலுவலர்) / தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் திருமதி.தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், உதவி தேர்தல் அலுவலர்கள், தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ. அசோக்குமார், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக