அரூரில் ரூ. 6.15 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 மார்ச், 2024

அரூரில் ரூ. 6.15 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு


தருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார்.


விழாவில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவிகள், கறவை மாடுகள் வளர்ப்புக்கான கடனுதவிகள், வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருள்கள், இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை 1, 337 பயனாளிகளுக்கு ரூ. 6.15 கோடி மதிப்பீட்டில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.


இந்த விழாவில் திமுக தருமபுரி மாவட்ட செயலாளர்கள் முனைவர் பி.பழனியப்பன், தடங்கம் பெ.சுப்பிரமணி, மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோட்டாட்சியர் ரா.வில்சன்ராஜசேகர்  வட்டாச்சியர் ராதாகிருஷ்ணன்  பேரூராட்சி தலைவர் இந்திராணி துணை தலைவர் சூர்யாதனபால் நகர செயலாளர் முல்லைரவி மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேடம்மாள் வே.சௌந்தரராசு கோ.சந்திரமோகன் சரவணன் முத்துகுமார் ஐடி விங் கு.தமிழழகன் கிராமநிர்வாக அலுவலர் ஆறுமுகம்   உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad