தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, நகர திமுக சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான, மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சி, மாரண்டஅள்ளி திமுக நகர அலுவலகத்தில் பேருராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பண்ணீர் செல்வம் மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏழை தாய்மார்கள் 50 பேருக்கு புடவை, இனிப்புக்கள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதனை தொடர்ந்து அணைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேசன், லட்சுமிமுனிராஜ், திமுக நகர பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர்கள் சகிலா, மாதையன், கிளை கழக செயலாளர்கள் வரதராஜ், வசந்தி, ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணகுமார், செல்வம், சிறுபான்மை பிரிவு நிர்வாகி சையத் உஸ்மான், இளைஞர் அணி வசிம், மூத்த நிர்வாகிகள் டாக்டர் .உபயத்ரகுமான், கிருஷ்ணன், குணசேகரன், டைலர் செந்தில், கலைச்செல்வி, வசந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பெறுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக