கரகதஅள்ளி கிராமத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி 82 உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 மார்ச், 2024

கரகதஅள்ளி கிராமத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி 82 உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகதஅள்ளி கிராமத்தில், திமுக, உள்ளிட்ட  மாற்று கட்சியில்  இருந்து விலகி 82 பேர்  அதிமுகவில் இனணயும் விழா கரகத அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல்  தலைமையில் நடைப்பெற்றது.


இதில் கரகத அள்ளி, கிராமத்தை சேர்ந்த திமுக , பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என  82 பேர்  அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டணர்.


கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து அனைவரையும் வரவேற்று பேசியதாவது, மீண்டும் சட்டமன்ற தேர்தலில்  மாபெரும் வெற்றியை பெற்று, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக அரசு நிறுத்திய மக்கள்  நலத்திட்டங்களான, முதியோர் ஓய்வூதியம், தாலிக்கு தங்கம், மடிக்கணிணி, மகளிர்  இரு சக்கர வாகனம், நீர் பாசன கால்வாய் திட்டம்  உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மீண்டும் செயல் படுத்துவோம் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் தெற்கு  ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் நகர செயலாளர் ரங்கநாதன்,, நகர செயலாளர் ராஜா, ஒன்றிய இணை செயலாளர் வெங்கடாசலம் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad