நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பிணர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 15வது வார்டில் 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பையோ ஷெட்டர் கொள்முதல் இயந்திரம், 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விடுபட்ட வீடுகளுக்கு புதிய குடிநீர் இனைப்பு வழங்குதல், 20 இலட்சம் ரூபாய் மதிப்பிட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டிட பராமரிப்பு மேற்கொள்ளுதல், 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் கட்டுதல், 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 8, 9, 10வது வார்டுகளில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்தல் ஆகிய 93 இலட்ச ரூபாய் மதிப்பீலலான புதிய திட்ட பணிகளுக்கு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு கல்வெட்டினை திறந்து வைத்து அடிக்கல் நாட்டி திட்டத்தை துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து ஏற்கனவே முடிவுற்ற குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக