சாலையை கடக்கும் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் பீதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 மார்ச், 2024

சாலையை கடக்கும் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் பீதி.


ஒகேனக்கல் சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர். ஒகேனக்கல் வனப்பகுதியில்  யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. வறட்சி காரணமாக, யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவதும் அடிக்கடி நடந்து வருகிறது. பண்ணப்பட்டி பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக, யானைகள் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி பகுதியில் ஒற்றை யானை சாலையை கடந்து சென்றது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்து சுற்றுலா பயணிகள் பீதியடைந்து திரும்பி சென்றனர்.  எனவே வனப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad