தேர்தல் பணிக்காக ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் இணைத்தல் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாகக்குழு தேர்தல் நடைபெறும்போது, தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளராக இருக்க, அங்கத்தினர்களின் பெயரோடு ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை (ரேக்ஷன் கார்டு) எண் இணைக்க வேண்டியுள்ளதால், ஆலையின் அனைத்து அங்கத்தினர்களும் தங்களுடைய அங்கத்தினர் எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகியவற்றின் நகல்களுடன் இவ்வறிவிப்பு கிடைக்கப்பெற்ற 20 தினங்களுக்குள் தங்கள் பகுதி கரும்பு கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு மேற்கண்ட விபரங்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான கிராம வாரியான அங்கத்தினர் விவரப்பட்டியல் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் நியாவிலைக்கடைகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது, இவ்வாய்பினை பயன்படுத்தி கொள்ள ஆலையின் அனைத்து அங்கத்தினர்களும் (Share holders) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இறந்த அங்கத்தினர்களின் வாரிசுதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பங்குமாற்றம் செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக