வெளி மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களிடமும் தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் கட்சியினருக்கு முனைவர் பி.பழனியப்பன் அறிவுரை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 மார்ச், 2024

வெளி மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களிடமும் தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் கட்சியினருக்கு முனைவர் பி.பழனியப்பன் அறிவுரை.


வெளிமாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களிடமும் தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் அரூர் பேரூராட்சி வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அறிவுரை.

தருமபுரி மேற்கு மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் செயலாளர் முல்லைரவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில் பாகமுகவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் கூலிவேலைக்கு வெளி மாவட்டம் சென்றுள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தொடர்பு கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடவேண்டும், மேலும் அரசு பணியில் உள்ளவர்களிடம் தினந்தோறும் தொடர்பில் இருந்து தபால் வாக்குகளை அதிகபடுத்த வேண்டும், பேரூராட்சி பகுதிகளில் தினந்தோறும் தின்னை பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பணியாற்றவேண்டும் என அறிவுரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில்  மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி நகர அவைத்தலைவர் காதர்பாஷா நகரதுணை செயலாளர்கள் விண்ணரசன் செல்வதயாளன் பொருலாளர் மோகன் பிரதிநிதிகள் குமரன் மதியழகன் அணிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் கு.தமிழழகன் கோட்டிஸ்வரன் ஏ.முஜீப்  முகமதுஅலி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad