கிருஸ்தவர்களின் புனித வெள்ளி சிலுவை பாதை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 மார்ச், 2024

கிருஸ்தவர்களின் புனித வெள்ளி சிலுவை பாதை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டத்தில் கிறிஸ்துவ சிறுபான்மையின மக்கள் தர்மபுரி, கோவிலூர், செல்லியம்பட்டி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பி. பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து மரித்து தினத்தை புனித வெள்ளி நெகிழ்ச்சியாக அனுசரித்து வருகின்றனர்.


அதன்படி பொம்மிடியில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் என மிக பயபக்தியுடன் சிலுவையில் அறைந்த இயேசுவின் நினைவுகளை நினைவு கூறும் வகையில் பொம்மிடியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


அப்பகுதி இளைஞர்கள் இயேசு சிலுவையில் மரித்த நிகழ்ச்சியை மிகத்திருபமாக நடித்துக் காண்பித்தனர், இந்த நிகழ்சியில் கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் பக்தியுடன் கலந்து கொண்டனர்.


அதே போல பி. பள்ளிப்பட்டி புகழ்பெற்ற லூர்து அன்னை திருத்தலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிலுவை பாதையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தர்மபுரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் மிக  பக்தியுடன் சிலுவைப்பாதை நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.


மாவட்டத்தில் உள்ள  கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி நிகழ்ச்சி சிலுவைப்பாதையில் கிறுஸ்தவ மக்கள் குடும்பம் குடும்பமாக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad