தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் சௌமியா அன்புமணி பி.அக்ரகாரம் முனியப்பன் கோயிலில் தரிசனம் செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 மார்ச், 2024

தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் சௌமியா அன்புமணி பி.அக்ரகாரம் முனியப்பன் கோயிலில் தரிசனம் செய்தார்.


தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாமி தரிசனம் செய்து வந்த தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் சௌமியா அன்புமணி அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பி.அக்ரகாரம் முனியப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அம்பேத்கர் சிலை அருகில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் முள்ளு வாடி பகுதியில் தனியார் கார்மெண்ட்ஸில் பணிபுரியும் பெண்களிடமும் பழைய பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி பகுதியிலும் வாக்கு சேகரித்தார் இதனைத் தொடர்ந்து பிராமணர் தெருவில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு அந்த சமுதாய மக்களிடம் வாக்கு சேகரித்தார்.


இதில் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் பெண்ணாகரம் எம்எல்ஏ ஜிகே மணி மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் மாவட்ட தலைவர் செல்வகுமார்  கிழக்கு ஒன்றிய செயலாளர் KPமுருகன்   மற்றும் கூட்டணி  கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad