தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக சௌமியாஅன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில், பாமக சார்பில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு, வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், அறிவு ஆகியோர் தலைமை தாங்கி, பட்டாசுகள், வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சோனியாகாந்தி வெங்கடேசன், முருகன், பாமக ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணி, நார்த்தம்பட்டி கோபி, ஒன்றிய அமைப்புச் செயலாளர் குப்பன் ஜெயக்குமார், சாந்தினி, வளர்மதி, சாந்தி, தேவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக