பாலக்கோடு, அருகே திம்மம்பட்டி கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீ சீர்வி சமாஜ் துர்கா கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 மார்ச், 2024

பாலக்கோடு, அருகே திம்மம்பட்டி கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீ சீர்வி சமாஜ் துர்கா கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.


தருமபுரி‌ மாவட்டம் பாலக்கோடு, அருகே  திம்மம்பட்டி கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீ சீர்வி சமாஜ் துர்கா கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம். 


வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரத்துவம், பரஸ்பர அன்பு, நல்வினைகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வண்ணங்களின் திருவிழா என்றும் அழைப்பர். 


பங்குனி மாதத்தின் இறுதியில் ஏற்படும் பௌர்ணமியன்று ஹோலி பண்டிகை உலகெங்கும் உள்ள இந்துக்களால் சிறப்பிக்கப்படுகிறது. இன்றளவில் அது பொதுப்பண்டிகையாகவும் மாறி இருக்கிறது. வாழ்வில் உண்டாகும் ஏற்ற-இறக்கங்களை மறந்து, அனைவரும் ஒன்றுமையாக இருக்கவும், நாடு செழிப்புற வண்ணங்களால் சிறப்பிக்கப்படுவதே ஹோலி பண்டிகையாகும்.


மேலும் ஹோலி பண்டிகையின் முதல் நாள் ஹோலிகா தஹன் அல்லது சோட்டி ஹோலி நிகழ்ச்சி நடைபெற்றது. திம்மம்பட்டி கூட்ரோடு அருகே உள்ளே  ஸ்ரீ சீர்வி சமாஜ் துர்கா கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இங்கு  மக்கள் ஒன்று கூடி வண்ண பொடிகள் மற்றும் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர்  வீசி விளையானர். பெண்கள் நடனம் ஆடினர். இவ்வாறாக இத் திருவிழாவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad