பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் 100% வாக்களிக்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூமுகமதுநசீர் உத்தரவின் பேரில் மாவட்ட வள நபர் பெருமாள் தலைமையில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது, முன்னதாக பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இப்பேரணி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி பாலக்கோடு பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று பாலக்கோடு பேரூராட்சி வரை வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற பரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ARO) தனபிரியா தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் தாசீல்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருலிநாதன், ஜெகதிசன், பேரூராட்சி செயலர் டார்த்தி, VAO சின்னசாமி கலந்து கொண்டு 100 சதவிம் வாக்களிக்க ஆட்டோ விளம்பரம், துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாளர் சிவலிங்கம் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வள்ளி, தனலட்சுமி, ஜெயசுதா, தமிழ்ச்செல்வி, சாலா மற்றும் நகர்புர வாழ்வாதார இயக்கம் ஒருங்கிணைப்பு அலுவலர் தவமணி. கலந்து கொண்டனர். அனைவரும் கலந்து கொண்டு 100 சதவிம் வாக்களிக்க வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக